1878 ஆம் ஆண்டு இப்பாடசாலையானது ஓந்தாச்சிமடம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 35 குடும்பங்கள் மாத்திரம் வசித்து வந்த இக் கிராமத்தின் தலைவரான வச்சிரபாகு இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு உந்து கோலாக இருந்து தனது கிராமத்திற்காக கத்தோலிக்க மதத்தைத் தழுவி தனது நிலத்திலேயே மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.






