ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம்

சரஸ்வதி பூஜை

WhatsApp_Image_2023-09-19_at_10838_PM_3.jpeg
whatsapp_image_2023-09-19_at_108.jpg

அகிலத்தில் என்றும் தமிழ் வாழ்க -2
ஆசிரியர் மேலோர் தினம் வாழ்க -2
அன்பும் பண்பும் உயிரெனக் கொண்டு
மாணவர் நாளும் வாழ்ந்திடுவோம் -2
(அகிலத்தில் என்றும்….)


ஓந்தாச்சிமடத்தில் கலையினை நல்கும்
விநாயகர் மகா வித்தியாலயமே
பாரினில் கல்வி வாழ்கின்ற வரையில்
பண்புடன் நாளும் வாழ்ந்திடுவோம் - 2
(அகிலத்தில் என்றும்….)


ஞானத்தை வளர்க்கும் கானத்தை நல்கும்
ஞானத்திலே உயர் கலைக்கூடம்
ஞானிகள் மேதைகள் தோன்றிட வைத்திடும்
விநாயகர் மகா வித்தியாலயமே
(அகிலத்தில் என்றும்….)


மடமையை கொழுத்தி கடமையைச் செய்து
மாண்புடனே என்றும் வாழ்ந்திடுவோம்
மாசிலாக் கல்வி சாலையில் கற்று
நாட்டிற்கு சேவை செய்திடுவோம் -2
(அகிலத்தில் என்றும்….)


கணிதமும் தமிழும் கலையுடன் விஞ்ஞானமும்
கசடற நாளும் கற்றிடுவோம்
மாந்தர்கள் எல்லாம் ஓர் குலமாக
பாரினில் மதித்து வாழ்ந்திடுவோம் -2

அகிலத்தில் என்றும் தமிழ் வாழ்க
ஆசிரியர் மேலோர் தினம் வாழ்க -2