ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம்

வரலாறு

சரஸ்வதி பூஜை

WhatsApp_Image_2023-09-19_at_10838_PM_3.jpeg
whatsapp_image_2023-09-19_at_108.jpg
History (Sample)

மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம் நிறுவப்பட்டு நூற்று நாற்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் வளர்ச்சியடைந்துள்ள ஒரு சிறந்த பாடசாலையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. 1878 ஆம் ஆண்டுமட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முதன்மையான அடித்தளம் இடப்பட்ட ஆண்டாகும். இதன் போது ஆரம்பத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலும் ஆழிப்பேரலையின் பின்னர் தற்போது பிரதான வீதி ஓந்தாச்சிமடத்திலும் அமைந்து காணப்படுகின்றது.


மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக(அதிபர்) திரு.வச்சிரபாகு ஐயா அவர்கள் பணியாற்றினார். இப் பாடசாலையானது 1895 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட அதேவேளை பாடசாலையானது படிமுறை படிமுறையாக வளர்ச்சி அடைந்தது. இப்பாடசாலையை நிறுவுவதற்காக சுனாமியின் பின் நெல் சந்தைப்படுத்தல் சபையானது இலவசமாக காணியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


1878 பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட வருடத்தில் கட்டிடத் தொகுதி ஓலையும் களியுமாகவே காணப்பட்ட நிலையில் 1972 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கற்கட்டிடமாக மாற்றப்பட்டது. ஆழிப்பேரலையின் பின்னர் கற்கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படவே 2007.08.26 ரொட்டரிக் கழகத்தினால் இப்பாடசாலை மாடிக்கட்டிடமாக மாற்றமடைந்தது. இதன்போது நூலகம், ஆய்வுகூடம், கணினி அறை போன்றவை பாடசாலையில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திரு.மயில்வாகனம் ஜீவரெத்தினம், திரு கெங்காசலம் கோணேஸ்வரன் போன்ற ஆசிரியர்கள் பாடசாலைக்கான தற்போதைய பாடசாலை கீதம் மற்றும் பாடசாலை இலச்சினை போன்றவற்றை உருவாக்கிய பெருமைக்குரியவர்களாவர்.