அதிபர் செய்தி
Mrs. M. பிரபாகரன்
மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தின் அதிபர் என்ற வகையில் இச் செய்தியை அளிப்பதில் உளமகிழ்ச்சி அடைகின்றேன். எங்கள் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புக் கல்வி வலயத்தில் வளர்ச்சியடைந்துள்ள ஒரு சிறந்த பாடசாலையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இப்பாடசாலைக்கு முதல் முதலில் 1878 ஆம் ஆண்டு முதன்மையான அடித்தளம் இடப்பட்ட ஆண்டாகும். இதன் போது ஆரம்பத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலும் ஆழிப்பேரலையின் பின்னர் தற்போது பிரதான வீதி ஓந்தாச்சிமடத்திலும் அமைந்து காணப்படுகின்றது.
எமது பாடசாலையில் இவ் வருடத்தில் 491 மாணவர்களும் 43 ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர். இப்பாடசாலையின் கல்விசார், கல்வி சாரா பணியாளர்களின் அர்ப்பணிப்பும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழைய மாணவர்கள், பாடசாலை மீது அபிவிருத்தி சார்பான நலன் விரும்பிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக பெற்றுக் கொள்ளப்படுகின்றது. எமது மாணவர்கள் கல்விசார் நடவடிக்கைகளிலும் இணைப்படவிதானச் செயற்பாடுகளிலும் விருத்தி பெற்று வருகின்றனர். 21ம் நூற்றாண்டின் கல்விப் போக்கானது தொழிநுட்பத்தை மையப்படுத்தியதாக உருவாகி வருகின்றது. அந்த வகையில் எமது மாணவர்கள் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியதும் கல்வியின் தேசிய இலக்குகளை அடையக் கூடியதுமான நற்பிரசையாக உருவாக எனது மனம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Mrs. M. பிரபாகரன்
அதிபர்
மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம்.






