ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம்

சரஸ்வதி பூஜை

WhatsApp_Image_2023-09-19_at_10838_PM_3.jpeg
whatsapp_image_2023-09-19_at_108.jpg

பிரதி அதிபர் செய்தி

Mrs. N.புவிராசா

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் சிறப்பாக செயற்பட்டு கல்வியிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இந் நிலையில் பாடசாலை வெளிச் சமூகத்தையும் பாடசாலையையும் இணைக்கும் பாலமாக எமது பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொன்னான சந்தர்ப்பம் ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.


ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தின் சாதனைகளையும்இ நினைவுகளையும் பதிவு செய்யவும் பாதுகாக்கவும் ஏற்ற ஊடகமாகவும் இத்தளம் எதிர்காலத்தில் அமையும். எனவே எமது பாடசாலையின் தகவல்களையும்இ பண்பாட்டையும், சாதனைகளையும் ஆவணப்படுத்துவது எமது தமிழ் சமுதாயத்துக்கு நாம் செய்யும் முக்கியமான கடமையாகவும் அமையும்.


இந்தவகையில் எமது பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உருவாக்கப்படுவதன் மூலம் சமூக ஊடகங்களும்இ ஏனைய இலத்திரனியல் ஊடகங்களும் தகவல்களை பெறுவதற்கும் சரியான தகவல்கள் வெளியிடுவதற்கும் உதவி செய்யும் என்பது எமது நம்பிக்கையாகும்.

Mrs. N.புவிராசா
பிரதி அதிபர்
மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம் ..