எமது பாடசாலையில் சரஸ்வதி பூஜை நிகழ்விற்கான போட்டி நிகழ்ச்சிகள்
(கோலம் போடுதல், பூ மாலை கட்டுதல், தோரனை அலங்கார வடிவமைப்பு) என்பன மாணவர்களுக்கிடையில் அதிபர் திருமதி. ம. பிரபாகரன் தலைமையில் 2023.10.09ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
எமது பாடசாலையிலிருந்து 2022/2023 ற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேவராசா மதுஜனா எனும் மாணவி 2A B பெறுபேற்றினைப் பெற்றுள்ளதோடு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி எமது பாடசாலைக்கு பெருமை பெற்றுத் தந்துள்ளார்.