எமது பாடசாலையில் உளநல வாரத்தை முன்னிட்டு , உளநல வாரமானது 9.10.2023 – 15.10.2023 வரை “உள நலம் உலகளாவிய மனித உரிமையாகும்” என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
09.10.2023 அன்று திங்கட்கிழமை காலை ஒன்றுகூடலின் போது அதிபர் திருமதி.ம.பிரபாகரன் அவர்களால் உளநல வாரம் பற்றிய உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உளநல வாரத்தில் மேற்கொள்ள வேண்டிய போட்டிகள் தொடர்பான விதிமுறைகள் , போட்டி வகைகள் தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
10.10.2023 செவ்வாய்க் கிழமை 2ம் நாள் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர் திரு.பூ.தவரஞ்சன் அவர்களால் ஒன்றுகூடலின் போது அனைத்து மாணவர்களுக்கும் “உளநலம் உலகளாவிய மனித உரிமையாகும்” என்ற கருப்பொருளில் உலக உளநல தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? உளநலம் என்றால் என்ன? இவ்வாண்டின் கருப்பொருள் போன்ற விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் கூறப்பட்டது.
11.10.2023 மூன்றாம் நாள் புதன் கிழமை சிரேஸ்ட ஆசிரியர் திருமதி கு.கோபாலபிள்ளை என்பவரால் 2023ம் ஆண்டிற்குரிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பேச்சு இடம்பெற்றது. இதன் போது உளநலம் குறைந்த மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் எவ்வாறு இடம்பெறும், அவர்களை எப்படி இனம் காண்பது? அவர்களின் ஆளுமையை எவ்வாறு விருத்தி செய்து கொள்ளலாம் போன்ற தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்;பட்டது.
12.10.2023 வியாழக் கிழமை நான்காம் நாள் நிகழ்வின் போது பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி.ஞா.புவிராசா அவர்களால் உள நலமும் கல்விச் சூழலும், உள நலன் உள்ள சிறுவர்களின் இயல்புகள் , உள நலத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் போன்ற தலைப்புக்களில் பேச்சுக்கள் இடம்பெற்றது.
13.10.2023 வெள்ளிக்கிழமை உளநல தின வாரத்தில் இடம்பெற்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் பாhட்டி கௌரவிக்கப்பட்டனர். அந்த வகையில்,
- கட்டுரை எழுதுதல் :- 1ம் இடம் :- கு.அஜீகன்
- 2ம் இடம் :- ச.ஜலக்ஷனா
- 3ம் இடம் :- த.ஷேஸாணிகா
- சித்திரம் வரைதல் - 1ம் இடம் :- த.கிதுஸிகா
- 2ம் இடம் :- பு.விபிஸனா
- 3ம் இடம் :- தினுக்ஷனா
இவ்வாறு 2023ம் ஆண்டிற்கான உளநலதினமானது எமது பாடசாலையில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு இனிதே நிறைவுபெற்றது.






